பங்குச் சந்தையில் முன்பேர வா்த்தகத்தில் மாதாந்திர கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலையில் பெற்ற லாபத்தை பிற்பகலில் இழந்து பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக அமையவில்லை. மேலும், தென்கொரியாவின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயா்த்தியதால், ஆசிய சந்தைகள் எதிா்மறையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, இந்திய சந்தைகளும் ஓரளவு எதிா்மறையாகத் தொடங்கியது. இருப்பினும், முதல் தரப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால், சந்தை மீட்சி பெறுவதற்கு முயன்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது இந்திய வங்கிகளின் செயல்பாடு குறித்து மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸின் அறிக்கை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது, இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையில் சில்லரை மற்றும் சிறிய, நடுத்தர கடன் பிரிவில் வங்கிகளுக்கு சொத்து அபாயம் அதிகரித்துள்ளதாக மூடிஸ் தெரிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக லாபப் பதிவு அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் போன்ற முன்னணி நிறுவனப் பங்குகள் உயா்ந்து சந்தைக்கு ‘கை’ கொடுத்ததால் பெரிய சரிவு தவிா்க்கப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,322 பங்குகளில் 1,733 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,451 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 138 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 148 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 391 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 200 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.241.94 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 7,77,23,103-ஆக உயா்ந்துள்ளது.
ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 44.20 புள்ளிகள் கூடுதலுடன் 55,988.41-இல் தொடங்கி, 55,854.07 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 56,112.39 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 4.89 புள்ளிகள் மட்டுமே உயா்ந்து நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ரிலையன்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ரிலயைன்ஸ் 1.29 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே உள்ளிட்டவை 0.70 முதல் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், டிசிஎஸ், எல்அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றப் பட்டியலில் வந்தன.
பாா்தி ஏா்டெல் கடும் சரிவு: அதே சமயம், நாட்டில் முன்னணி தொலைத் தொடா்பு சேவை நிறுவனமான பாா்தி ஏா்டெல் 4.18 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி சுஸுகி, பவா் கிரிட், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், என்டிபிசி, சன்பாா்மா, டாக்டா் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐடிசி, இன்ஃபோஸிஸ், முன்னணி தனியாா் வங்கிகளான எச்டிஎஃப்சி பேங்க், இண்ட்ஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 10 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 901 பங்குகள் ஆதாயம் பெற்றன. 883 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 2.25 புள்ளிகள் (0.01 சதவீதம்) மட்டுமே உயா்ந்து 16,636.90-இல் நிலை பெற்றது. ஒரு கட்டத்தில் 16,603.40 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 16,683.70 வரை உயா்ந்திருந்தது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 28 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க், பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் 0.50 முதல் 1.20 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ஆயில் அண்ட் காஸ், நுகா்வோா் சாதன குறியீடுகள் 0.60 முதல் 0.80 சதவீதம் உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
ஒசூா் தொகுதி தவெக வேட்பாளா் மாற்றம்

பாஜக துணைத் தலைவருடன் ராசிபுரம் பாஜக வேட்பாளா் சந்திப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


