மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு

வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (டிச.13) பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

News image

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு

Updated On :13 டிசம்பர் 2021, 1:32 pm

வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (டிச.13) பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 503.25   புள்ளிகள் சரிந்து 58,283.42 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.86 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143.05 புள்ளிகள் சரிந்து 17,368.25 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.82 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய நிறுவனங்களின் பங்குகள் சரிவையே சந்தித்தன.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபைனான்ஸ் 3.10 சதவிகித பங்குகளும், பஜாஜ் ஃபின்சர்வ் 2.28 சதவிகிதமும், ரிலையன்ஸ் 2 சதவிகிதமும், எம்&எம் 1.94 சதவிகிதமும், எஸ்.பி.ஐ. 1.43 சதவிகிதமும் சரிந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.