ரெட்மி நோட் சீரிஸில் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததாக பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி தெரிவித்துள்ளது.
ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டும் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான யூனிட்டுகள் உலகளவில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் சாதனையின் மைல்கல் என்றும் ஸியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் எம்.ஐ10டி புரோ, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 புரோ, ரெட்மி 9, பிரைம் ரெட்மி 9, ரெட்மி 9ஏ போன்ற மாடல்கள் சேர்த்து 90 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளன.
2020 ஆம் ஆண்டில்உலகளவில் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ள ஸியோமியின் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு 31 சதவீதம் அதிகரித்து 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.3 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. சீனாவில் ஸியோமியின் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்து 1.2 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், ஸியோமி 2020 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் 13 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

