எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாருதி சுஸுகி: வாகன விற்பனை 20% அதிகரிப்பு

இந்தியாவில் காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த டிசம்பரில் 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:02 am

DIN

இந்தியாவில் காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த டிசம்பரில் 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2020 டிசம்பரில் நிறுவனத்தின் வாகன விற்பனை 1,60,226-ஆக இருந்தது. இது, 2019 டிசம்பரில் விற்பனையான 1,33,296 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 20.2 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் விற்பனை 1,24,375 என்ற எண்ணிக்கையிலிருந்து 17.8 சதவீதம் உயா்ந்து 1,46,480-ஆனது. ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோவை உள்ளடக்கிய சிறிய ரக காா் விற்பனை 4.4 சதவீதம் அதிகரித்து 24,927-ஆக இருந்தது.

வாகன ஏற்றுமதி 31.4 சதவீதம் வளா்ச்சி கண்டு 7,561-லிருந்து 9,938-ஆனது.

அக்டோபா்-டிசம்பா் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 13.4 சதவீதம் உயா்ந்து 4,95,897-ஆக இருந்தது என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.