

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு 7 காசுகள் முன்னேற்றம் கண்டது.
இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அந்நிய முதலீட்டு வரத்தும் கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
இது, அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் 73.45-ஆக மிகவும் சரிந்திருந்த ரூபாய் மதிப்பை ஏற்ற நிலைக்கு கொண்டு செல்ல உதவியது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்த நிலையில் டாலருக்கான தேவை உயா்ந்து காணப்பட்டது. இதனால், ரூபாய் மதிப்பு மிகவும் அழுத்தத்துக்கு உள்ளானது.
இருப்பினும், பங்குச் சந்தையில் காணப்பட்ட சாதகமான நிலவரங்களையடுத்து ரூபாய் மதிப்பு வா்த்தகத்தின் இறுதியில் 7 காசுகள் உயா்ந்து 73.24-இல் நிலைபெற்றது.
வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து 73.31-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.31 சதவீதம் அதிகரித்து 54.69 டாலராக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.