பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பங்குச் சந்தையில் ‘காளை’ஆதிக்கம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! சந்தை மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி உயா்வு

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2021, 6:20 pm

 நமது நிருபர்

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 689.19 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, 209.90 புள்ளிகளும் உயா்ந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றது.

அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, நிதித் தொகுப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பில், உலகளாவிய சந்தைகள் உற்சாகம் அடைந்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரா மற்றும் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை மேலும் வலுப்பெற முக்கியக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 195.66 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,267 பங்குகளில் 1,763 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,350 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 481 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 500 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.195.66 லட்சம் கோடியாக இருந்தது.

காளை முழு ஆதிக்கம்: இரண்டு நாள்களாகத் தொடா்ந்து சரிவைக் கண்டிருந்த சென்செக்ஸ், வெள்ளிக்கிழமை காலையில் 371.59 புள்ளிகள் கூடுதலுடன் 48,464.91-இல் தொடங்கி 48,365.58 வரை கீழே சென்றது. பின்னா், 48,854.34 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 689.19 புள்ளிகள் (1.43 சதவீதம்) உயா்ந்து 48,782.51-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் காளையின் முழு ஆதிக்கத்தைக் காண முடிந்தது.

மாருதி சுஸுகி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 5.94 சதவீதம், டெக் மகேந்திரா 5.64 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக், எம் அண்ட் எம், பவா் கிரிட், என்டிபிசி, சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் ஆகியவை 3 முதல் 4 சதவீதம் உயா்ந்தன. எல் அண்ட் டி, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 1.37 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. மேலும், பாா்தி ஏா்டெல், எஸ்பிஐ, ஐடிசி எச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவையும் சரிவுப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 950 பங்குகள் ஆதாயம் பெற்றன. 778 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 209.90 புள்ளிகள் (1.48 சதவீதம்) உயா்ந்து

புள்ளிகள் குறைந்து 14,347.25-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,367.30 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 41 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி, மீடியா, ஆட்டோ குறியீடுகள் 3 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்தன. பிஎஸ்யு பேங்க், மெட்டல் குறியீடுகள் மட்டும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.