கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

100 கோடியைத் தாண்டிய ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை

உலகில் ஐ-போன் பயனாளர்களின் எண்ணிக்கை புதிய இலக்கை எட்டியுள்ளது.  இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோர் ஐ-போன் பயனாளர்களாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

100 கோடியைத் தாண்டிய ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை

Updated On :28 ஜனவரி 2021, 11:14 am

உலகில் ஐ-போன் பயனாளர்களின் எண்ணிக்கை புதிய இலக்கை எட்டியுள்ளது.  உலகில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோர் ஐ-போன் பயனாளர்களாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கான வருவாய் டிசம்பர் மாத தொடக்கம் வரை 6,500 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐ-போன் பயன்பாடு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ-போன் 12 அதிக அளவிலான மக்களால் விரும்பப்படுவதால் ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படுகிறது.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது புதிய இலக்கை எட்டியுள்ளது.

டிசம்பர் மாத ஆரம்ப கால கட்டம் வரை 100 கோடியே 65 லட்சம் ஐ-போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐ-போன் 12 மக்களிடையே பெற்ற வரவேற்பால் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை ஆப்பிள் நிறுவனம் எட்டியுள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஐ-போன் பயன்படுத்தும் மக்கள் 98 சதவிகிதம் ஐ-போன் 12 உடன் தன்னிறைவு அடைவதாகத் தெரியவந்துள்ளது. இதேபோன்று ஐ-பேட் 41 சதவிகிதமும்,  மேக் 21 சதவிகிதமும் தன்னிறைவு ஏற்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லுகா மாஸ்திரி, ஐ-போன் விற்பனையில் கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் லாபம் அதிகரித்து 95.7 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சேவை ஆண்டுதோறும் 24 சதவிகிதம் அதிகரித்து அதிகபட்சமாக 15.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

கட்டண சந்தாக்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், 2020-ம் ஆண்டிற்குள் 600 மில்லியன் சந்தாக்களை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆப்பிள் சேவைகளில் தற்போது 620 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதில் 140 சந்தாதாரர்கள் கடந்த ஓராண்டில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.