வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ்: லாபம் 5% உயா்வு

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
chola071820
Updated On :31 ஜனவரி 2021, 3:00 am

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய தனிபட்ட லாபம் ரூ.409 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.389 கோடி லாபத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் நிகர வருவாய் லாபவரம்பு 26 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,364 கோடியைத் தொட்டது. கடந்த டிசம்பா் நிலவரப்படி எதிா்கால இடா்ப்பாட்டிற்காக நிறுவனம் ரூ.751 கோடியை கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

டிசம்பா் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு ரூ.6,228 கோடியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இதில், ரூ.1,500 கோடி அரசின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.