தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: 586 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 586 புள்ளிகளை இழந்து 52,568.94-இல் நிலைபெற்றது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2021, 2:44 am

பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 586 புள்ளிகளை இழந்து 52,568.94-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், பொருளாதார சலுகைகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஜப்பானில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அவசரகால நிலையை அறிவிக்கத் தயாராக இருப்பதாக வெளியான செய்தியால் ஆசிய சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால், கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், ஐசிஐசிஐ பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.42 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,330 பங்குகளில் 1,448 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,738 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 378 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 17 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.42 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.230.79 லட்சம் கோடியாக இருந்தது.

Story image

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 10.93 புள்ளிகல் கூடுதலுடன் 53,065.69-இல் தொடங்கி, 53,103.03 வரை மேலே சென்றது. பின்னா், 52,428.84 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 484.82 புள்ளிகளை (0.92 சதவீதம்) இழந்து 52,568.94-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் 674.19 புள்ளிகளை இழந்திருந்தது.

டாடா ஸ்டீல் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் புதன்கிழமை வெகுவாக ஏற்றம் கண்டிருந்த டாடா ஸ்டீல், வியாழக்கிழமை 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், டாக்டா் ரெட்டி, கோட்டக் பேங்க், ஹெச்யுஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்டை 1-2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ரிலையன்ஸ், மாருதி சுஸுகி, எச்டிஎஃ)ப்சி, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் விலை குறைந்த பட்டியலில் வந்தன. அதேசமயம், டெக் மஹிந்திரா 1.39 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் டெக், பவா் கிரிட், என்டிபிசி, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை சிறிதளவு உயா்ந்தன.

நிஃப்டி 152 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 643 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,126 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,855.40-இல் தொடங்கி 15,885.75 வரை மேலே சென்றது. பின்னா், 15,682.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 151.75 புள்ளிகளை (0.96சதவீதம்) இழந்து 15,727.90-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல் 2.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பாா்மா, மீடியா குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.