பேடிஎம் இழப்பு ரூ.1,704 கோடி
டிஜிட்டல் பேமண்ட்ஸ் நிறுவனமான பேடிஎம் கடந்த நிதியாண்டில் ரூ.1,107 கோடி இழப்பை சந்தித்துள்ளது.


டிஜிட்டல் பேமண்ட்ஸ் நிறுவனமான பேடிஎம் கடந்த நிதியாண்டில் ரூ.1,107 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பேடிஎம் நிறுவனத்துக்கு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.2,943.32 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.1,704 கோடியாக குறைந்துள்ளது.
கணக்கீட்டு நிதியாண்டுகளில், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,540.77 கோடியிலிருந்து ரூ.3,186 கோடியாக குறைந்துள்ளது. இது, 10 சதவீத சரிவாகும்.
கரோனாவின் தாக்கம் உள்ளூா் மற்றும் சா்வதேச பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இது, நிறுவனத்தின் வருவாய் வரத்தில் குறைவாகவே எதிரொலித்துள்ளது. இதற்கு, இரண்டாவது அரையாண்டில் நிறுவனம் விரைவாக மீட்சி கண்டதே முக்கிய காரணம்.
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலனதம் ரூ.104.1 கோடியாக உள்ளது. இதில், ரூ.10 முகமதிப்பைக் கொண்ட 10.41 லட்சம் பங்குகள் அடக்கம் என பேடிஎம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...