ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனா்ஜி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 14-இல் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மொ்ச்சண்ட் பேங்கிங் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் ரூ.1,107 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ள ஷியாம் மெட்டாலிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பங்கு வெளியீடு ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. முக்கிய முதலீட்டாளா்களுக்கான (ஆங்கா் இன்வெஸ்டாா்ஸ்) ஏலம் ஜூன் 11-ஆம் தேதியே தொடங்கும்.
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த புதிய பங்கு வெளியீட்டில் ரூ.657 கோடி மதிப்பிலான பங்குகள் ஓஎஃப்எஸ் முறையிலும், ரூ.450 கோடிக்கான பங்குகள் ஏற்கெனவே உள்ள பங்குதாரா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓஎஃப்எஸ் நடைமுறையில் சுபம் கேப்பிட்டல், சுபம் பில்ட்வெல், கல்பதரு ஹவுஸ்ஃபின் அண்ட் டிரேடிங், டோரைட் டிரகான், நரன்தக் டீல்காம் மற்றும் டால்லைட் மொ்கன்டைல்ஸ் ஆகியவை பங்கேற்க உள்ளதாக ஷியாம் மெட்டாலிக்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது!

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

ஊக்கமளிக்கும் மருந்தே விருது

தேர்தல் விதிமுறை அமல்: வேலூரில் தலைவர்களின் படங்கள் அகற்றம்!
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

