ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வீழ்ச்சி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் லாபப் பதிவால் சரிவைச் சந்தித்தது. இதனால்,மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 186 புள்ளிகளை இழந்து 52,549-இல் நிலைபெற்றது. 

News image
Updated On :29 ஜூன் 2021, 9:51 pm

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் லாபப் பதிவால் சரிவைச் சந்தித்தது. இதனால்,மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 186 புள்ளிகளை இழந்து 52,549-இல் நிலைபெற்றது.
 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைத் திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. இது சந்தைக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசியக் கண்டத்தில் புதிதாக கரோனா டெல்டா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவது சந்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
 மேலும், ஆசியா, ஐரோப்பா, தென்ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாடுகளும் சந்தைக்கு பாதகமாக அமைந்தது. பார்மா தவிர மற்ற துறைப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.72 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,351 பங்குகளில் 1,644 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,587 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 120 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.
 417 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூலதன மதிப்பு ரூ.72 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.229.70 லட்சம் கோடியாக இருந்தது.

Story image

2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 60.17 புள்ளிகள் கூடுதலுடன் 52,795.76-இல் தொடங்கி 52,816.42 வரை உயர்ந்தது. பின்னர் 52,477.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 185.93 புள்ளிகளை (0.35 சதவீதம்) இழந்து 52,549.66-இல் நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.
 பவர் கிரிட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் பவர் கிரிட் 1.75 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, இன்டஸ்இண்ட் பேங்க், ஏஷியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்றன.
 கோட்டக் பேங்க் சரிவு: அதேசமயம், கோட்டக் பேங்க் 1.56 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.52 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, மாருதி சுஸýகி, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன. எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 66 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 781 பங்குகள்ஆதாயம் பெற்றன. 988 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,807.50-இல் தொடங்கி 15,835.90 வரை உயர்ந்தது. பின்னர் 15,724.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 66.25 புள்ளிகளை (0.42 சதவீதம்) இழந்து 15,748.45-இல் நிலைபெற்றது.
 நிஃப்டி எஃப்எம்சிஜி, பார்மா தவிர்த்து மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன.
 இதில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.