தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் அம்சம்!

கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை பயனர்களால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

News image
கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் அம்சம்!
Updated On :19 மே 2021, 5:57 am

DIN

கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை பயனர்களால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு அடிப்படை அம்சமாக இருந்தாலும்,  ஹெட்செட் அணிந்திருப்பவர்களுக்கும் அழைப்பாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் அம்சம் பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கும், பாடல்கள், முக்கிய ஒலிநாடாக்களை கேட்டுக்கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை துண்டிப்பதற்கும் 'அழைப்பாளர் விவரங்களை தெரிவிக்கும் அம்சம்' பெரிதும் உதவியாக உள்ளது. 

இந்த அம்சத்தைப் பெற கூகுள் போனில் செட்டிங் > காலர் ஐடி அனெளன்ஸ்மென்ட் பிரிவில் சென்று பெறலாம்.

இதில் எப்போதுமே 'காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டும்' அல்லது 'ஹெட்செட்களை உபயோகிக்கும்போது மட்டும் தெரிவிக்க வேண்டும்' அல்லது 'காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டாம்' என்று மூன்று உள்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானவற்றை நாம் தெரிவுசெய்துகொள்ளலாம்.

கூகுள் போனில் மட்டுமல்லாது, மற்ற ஆன்டிராய்ட் செல்போன்களிலும் இந்த அம்சம் கூகுள் செயலி மூலம் வழங்கப்படுகிறது. ஆன்டிராய்ட் செல்போன்களில் அவை இயல்புநிலை டயலர்களாகவும் இருக்கின்றன.

பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.