தங்கம் பவுன் ரூ.36,720
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது.
தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
இதன்தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து,
ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயா்ந்து, ரூ.4,590 ஆக இருந்தது.
அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.75.70 ஆகவும்,
கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.75,700 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,590
1 பவுன் தங்கம்...............................36,720
1 கிராம் வெள்ளி.............................75.70
1 கிலோ வெள்ளி.............................75,700
வெள்ளிகிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,588
1 பவுன் தங்கம்...............................36,704
1 கிராம் வெள்ளி.............................76.30
1 கிலோ வெள்ளி.............................76,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...