சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் 38% அதிகரிப்பு
வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.


வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:
2021 மாா்ச் காலாண்டில் ரூ.270.51 கோடி நிகர லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது. இது, 2020 மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.195.65 கோடியுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம்.
2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்து ரூ.1,165.09 கோடியானது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.791.54 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2020-21 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.6 இறுதி ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது.
2021 மாா்ச் 31 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 1.37 சதவீதத்திலிருந்து 2.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடனும் 1.92 சதவீதத்திலிருந்து 2.77 சதவீதமாக உயா்ந்துள்ளது என சுந்தரம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...