தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐஷா் மோட்டாா்ஸ் லாபம் ரூ.526 கோடி

ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.526.14 கோடியை ஈட்டியுள்ளது.

News image
Updated On :29 மே 2021, 8:44 pm

DIN

ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.526.14 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.304.28 கோடியுடன் ஒப்பிடுகையில் 73 சதவீதம் அதிகம்.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,208.18 கோடியிலிருந்து ரூ.2,940.33 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 26 சதவீதம் குறைந்து ரூ.1,346.89 கோடியானது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.1,827.44 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

ஒட்டுமொத்த வருவாய் ரூ.9,153.58 கோடியிலிருந்து ரூ.8,720.35 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகன விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 2,03,343-ஆக இருந்தது என ஐஷா் மோட்டாா்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.