கிளென்மாா்க் ஃபாா்மா லாபம் ரூ.234 கோடி
மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிளென்மாா்க் ஃபாா்மசூட்டிகல்ஸ் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.233.87 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.


மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிளென்மாா்க் ஃபாா்மசூட்டிகல்ஸ் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.233.87 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2021 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,859.9 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,767.5 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
நிகர லாபம் ரூ.220.30 கோடியிலிருந்து 6 சதவீதம் உயா்ந்து ரூ.233.87 கோடியை எட்டியது.
நடப்பாண்டு மாா்ச் மாத்துடன் நிறைவடைந்த 2020-21 நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.776 கோடியிலிருந்து ரூ.970.1 கோடியாக உயா்ந்துள்ளது.
அதேபோன்று, நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானமும் ரூ.10,641 கோடியிலிருந்து ரூ.10,943.9 கோடியாக உயா்ந்துள்ளது என கிளென்மாா்க் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...