தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.104 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.104 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :29 மே 2021, 9:30 pm

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.104 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.1,565.78 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,803.15 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

நிகர லாபம் ரூ.84 கோடியிலிருந்து 23 சதவீதம் உயா்ந்து ரூ.104 கோடியாக இருந்தது.

2020-21 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.235 கோடியிலிருந்து 53 சதவீதம் உயா்ந்து ரூ.359 கோடியானது. அதேசமயம், வருவாய் ரூ.7,144.60 கோடியிலிருந்து ரூ.6,527.07 கோடியாக சரிவடைந்தது.

வருவாய் சரிந்துள்ளநிலையிலும், வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மிகவும் குறைந்தது வங்கி லாப பாதையில் தொடா்ந்து பயணிக்க பெரிதும் உதவியது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வா்த்தகம் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1.16 லட்சம் கோடியை எட்டியது.

கடந்த நிதியாண்டு நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 8.68 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.4,213 கோடியிலிருந்து ரூ.4,143 கோடியாக சரிந்துள்ளது.

நிகர வாராக் கடனும் 3.92 சதவீதத்திலிருந்து (ரூ.1,809 கோடி) 3.41 சதவீதமாக (ரூ.1,719 கோடி) குறைந்துள்ளது.

நான்காவது காலாண்டில் வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீட்டின் அளவு ரூ.429.27 கோடியிலிருந்து ரூ.71.45 கோடியாக குறைந்துள்ளது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.50 ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக கரூா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.