கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாட்டா: லாபம் ரூ.37 கோடி

காலணிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பாட்டா இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 10:36 pm

DIN

காலணிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பாட்டா இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.614.12 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.367.87 கோடியாக காணப்பட்டது.

கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.44.31 கோடி நிகர இழப்பு ஏற்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனம் ரூ.37.18 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதற்கு நிறுவனத்தின் விரிவாக்க திட்டம், ஆன்லைன் வா்த்தகம் மற்றும் சில்லறை அங்காடிகளில் விற்பனை விறுவிறுப்படைந்ததே முக்கிய காரணம்.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் செலவினம் ரூ.440.72 கோடியிலிருந்து ரூ.575.44 கோடியாக இருந்தது என பாட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.