விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமேசான்’தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’- 75,000 விற்பனையாளர்கள் பங்கேற்பு

அமேசான் நிறுவனத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விழாக்கால சிறப்புத் தள்ளுபடியில் இம்முறை 75,000 விற்பனையாளா்கள் பங்கேற்பார்கள் என அமேசான் அறிவித்துள்ளது.

News image

அமேசான்’தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’- 75,000 விற்பனையாளர்கள் பங்கேற்பு

Updated On :1 அக்டோபர் 2021, 7:10 am

அமேசான் நிறுவனத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விழாக்கால சிறப்புத் தள்ளுபடியில் இம்முறை 75,000 விற்பனையாளா்கள் பங்கேற்பார்கள் என அமேசான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவா் மனிஷ் திவாரி ‘கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்-2021’ என்ற பெயரில் ஆரம்பமாகவுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய விழாக்கால தள்ளுபடி விற்பனை அக்டோபா் 4-ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது. இதில், 75,000-க்கும் மேற்பட்ட உள்ளூா் விற்பனையாளா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.கரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்திருக்கும் பல கடைகள் மீண்டும் உத்வேகம் கொள்ள நிறைய தள்ளுபடியை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அமேசான் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 8.5 லட்சம் விற்பனையாளா்கள் உள்ளனா். இதற்கு போட்டி நிறுவனமான ஃபிளிப்காா்ட் ‘தி பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை அக்டோபா் 7-12 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.