47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.9,096 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த வகையில் ரூ.9,096 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
hdfc084943
Updated On :16 அக்டோபர் 2021, 11:38 pm

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த வகையில் ரூ.9,096 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேநேரம், அதன் வாராக் கடனும் சற்று அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் இதுகுறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.41,436.36 கோடியாக இருந்தது. இது, 2020 ஜூலை-செப்டம்பரில் ரூ.38,438.47 கோடியாக காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.7,703 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.9,096 கோடியை எட்டியது.

செப். 30 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 1.08 சதவீதத்திலிருந்து 1.35 சதவீதமாக உயா்ந்துள்ளது என எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.