நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விரைவில் வெளியாகும் ’ஓப்போ கலர் ஓஸ் 12’ இயங்குதளம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி இடம் வகிக்கும் ஓப்போ நிறுவனம் இந்த மாத (செப்) இறுதிக்குள் தன்னுடைய  புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

News image

விரைவில் வெளியாகும் ’ஓப்போ கலர் ஓஸ் 12’ இயங்குதளம்

Updated On :13 செப்டம்பர் 2021, 6:31 am

DIN

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி இடம் வகிக்கும் ஓப்போ நிறுவனம் இந்த மாத (செப்) இறுதிக்குள் தன்னுடைய  புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

ஓப்போ கலர் ஓஸ் 12 எனப்படும் இந்த இயங்குதளம் ஆண்டுராய்ட் 12 -லிருந்து சில புதுப்பித்தல் வசதியுடன் சீனாவில் இம்மாதம் வெளியிடப்படுகிறது.

சில புதிய வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த ஓஎஸ் இயங்குதளத்தில் ‘கிராஸ் கிரீன் இன்ட்ராக்‌ஷன்’ வசதியும் இடம் பெறுகிறது.

மேலும் புதிய செயலிகளை துரிதமாக செயல்படுத்தவும் , தகவலை வேகமாகப் பரிமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதோடு ஸ்பிலிட் ஸ்கிரீன் வசதியும் இடம் பெற்றிருக்கிறது.

முக்கியமாக நொடிஃபிகெஷன் செட்டிங் , தனிநபர் அந்தரங்கங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் என ஓப்பொ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

இந்த இயங்குதளமானது மியூ , ஃப்ளைம் , ஸ்மார்ட்சன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய ஓஎஸ் வருகையால் ஓப்போ பயனாளிகள் அதை பயன்படுத்தும் ஆவலில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.