சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

News image

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

Updated On :14 செப்டம்பர் 2021, 5:26 am

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (செப்.14) பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. நேற்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிந்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 248.77 புள்ளிகள் உயர்ந்து 58,426.53 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.43 சதவிகிதம் உயர்வாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67.70 புள்ளிகள் உயர்ந்து 17,428.90 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்படுகிறது. எஞ்சிய 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. 

அதிகபட்சமாக அக்ஸிஸ் வங்கி 1.66 சதவிகிதமும், எச்.சி.எல். டெக் 1.52 சதவிகிதமும், பஜாஜ் ஆட்டோ 1.33 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1.32 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.