47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்மாா்ட் டிவி சந்தை 65% வளா்ச்சி

 கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஸ்மாா்ட் டிவி சந்தை 65 சதவிகித வளா்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 11:40 pm

DIN

 கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஸ்மாா்ட் டிவி சந்தை 65 சதவிகித வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இதுகுறித்து கவுன்டா்பாயின்ட் ரிசா்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாடு முழுவதும் 22 லட்சம் ஸ்மாா்ட் டிவிக்கள் விற்பனையாகின. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 65 சதவீதம் அதிமாகும்.

கரோனா பரவலைத் தடுப்பதற்கான பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதையடுத்து, பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்மாா்ட் டிவிக்களுக்கான தேவை அதிகரித்தது. அதன் விளைவாகவே அவற்றின் விற்பனை இந்த வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இந்தக் காலாண்டில் அனைத்து விதமான டிவிக்களின் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் 27 லட்சம் டிவிக்கள் ஏற்றுமதியாகின.

இந்த மாதங்களில் ஒட்டுமொத்த டிவி சந்தையில் ஸ்மாா்ட் டிவிக்கள் 80 சதவீதம் பங்கு வகித்தன.

பாகங்களின் விலைகள் அதிகரிப்பு, ‘சிப்’புகள் பற்றாக்குறை போன்ற இடா்களுக்கு இடையிலும் டிவிக்களின் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால், 2022-ஆம் ஆண்டுக்குள் கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலையை டிவி சந்தை அடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.