சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஏற்றத்துடன் முடிந்த வணிகம்: சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. இதில் சென்செக்ஸ் 514 புள்ளிகளும், நிஃப்டி 165 புள்ளிகளும் உயர்ந்தன.

News image

சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

Updated On :21 செப்டம்பர் 2021, 11:15 am


வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. இதில் சென்செக்ஸ் 514 புள்ளிகளும், நிஃப்டி 165 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.34  புள்ளிகள் உயர்ந்து 59,005.27 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.88 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165.10 புள்ளிகள் உயர்ந்து 17,562.00 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.95 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டது. எஞ்சிய 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 

அதில் அதிகபட்சமாக ஹெச்.யு.எல். 1.18 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.16 சதவிகிதமும், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 1.09 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.02 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.