ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'ஆசஸ்' நிறுவனத்தின் புதிய மடிக்கணினி அறிமுகம், விலை ரூ.1,79,990

ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’செஃபிரஸ்’(Zephyrus) மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 11:33 am

DIN

ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான செஃபிரஸ் எம்16 (Zephyrus m16)  மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான ‘ஆசஸ்’ நிறுவனம் தன்னுடைய சமீபத்திய தயாரிப்பான ’செஃபிரஸ் எம்16’ 2022 மாடல் மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மடிக்கணினி கேமிங் பயனர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று என அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் அர்னால்ட் சூ தெரிவித்துள்ளார்.

ஆசஸ் ’செஃபிரஸ் எம்16’ சிறப்பம்சங்கள்:

* 16-இன்ச் திரை

* ஜெனரேஷன் 12 இண்டெல் கோர் பிராசஸர்( new 12th Gen Intel Core H-series processor)

* ஐ9-12900 எச் சிபியு (i9-12900H CPU )

* என்விடியா ஜிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3080 கிராஃபிக்ஸ்  (NVIDIA GeForce RTX 3080Ti graphic)

* ரேம் -32ஜிபி 

கேமிங்க்(gaming) பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மடிக்கணினியின் விற்பனை விலை ரூ. 1,79,990- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.