30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. அதேசமயம், 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் பிரபல தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க், வீட்டு வசதிக் கடன் அளிக்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய இரண்டும் 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸýகி, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஏஷியன் பெயிண்ட், பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.