தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்: லாபம் ரூ.41 கோடி

சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.41.14 கோடி நிகர லாபம் ஈட்டியது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:10 am

DIN

சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.41.14 கோடி நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.31.58 கோடியுடன் ஒப்பிடுகையில் 30.27 சதவீதம் அதிகமாகும்.

2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.160.70 கோடியாக இருந்தது.

இணைப்பு நடவடிக்கையையடுத்து பிரேக்ஸ் இந்தியாவில் சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸின் பங்கு மூலதனம் 14.37 சதவீதத்திலிருந்து 23.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகழாண்டு ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் தொகுப்பு நிறுவனங்களிடமிருந்து ரூ.40.20 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளதாக சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.