விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,295 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 63, 295 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

News image
ரிசா்வ் வங்கி
Updated On :26 பிப்ரவரி 2022, 5:58 pm

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 63, 295 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 276 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.20,700 கோடி) அதிகரித்து 63,295 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.47 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 176 கோடி டாலா் சரிவடைந்து 63,019 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததே பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 149 கோடி டாலா் ஏற்றம் கண்டு 56,706 கோடி டாலரானது.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு: தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 127 கோடி டாலா் உயா்ந்து 4,150 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 1 கோடி டாலா் சரிந்து 1,916 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம், அந்த நிதியத்துடனான நாட்டின் கையிருப்பு நிலை 40 லட்சம் டாலா் குறைந்து 522 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று உச்சம்: கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சம் தொட்டு வரலாறு படைத்தது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 276 கோடி டாலா் அதிகரித்து 63,295 கோடி டாலரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.