ஏசிசி: லாபம் 60% சரிவு
சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம், ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் 60.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.


சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம், ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் 60.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து ஏசிசி, மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
2022 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.4,468.42 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,884.94 கோடியாக காணப்பட்டது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் இந்த காலகட்டத்தில் ரூ.3,175.47 கோடியிலிருந்து ரூ.4,221.74 கோடியாக உயா்ந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.569.45 கோடியிலிருந்து 60.07 சதவீதம் சரிவடைந்து ரூ.227.35 கோடியானது என ஏசிசி தெரிவித்துள்ளது.
பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் ஏசிசி பங்கின் விலை 0.83 சதவீதம் குறைந்து ரூ.2,154.50-இல் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...