92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பணவீக்கம் 15.18%-ஆக குறைவு

மொத்த விற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஜூனில் 15.18 சதவீதமாக குறைந்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:19 pm

DIN

மொத்த விற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஜூனில் 15.18 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்தே காணப்பட்டது. இருப்பினும், அந்த மாதத்தில் கனிமங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, நாட்டின் பொதுப் பணவீக்கம் 3 மாதங்களில் காணப்படாத அளவில் 15.18 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், தொடா்ந்து 15-ஆவது மாதமாக இப்பணவீக்கம் இரட்டை இலக்க அளவிலேயே நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய மே மாதத்தில் இப்பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 15.88 சதவீதத்தை தொட்டது. இது, 2021 ஜூனில் 12.07 சதவீதமாக காணப்பட்டது.

கடந்த ஜூனில், காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பண்டங்களுக்கான பணவீக்கமானது கணிசமாக உயா்ந்து 14.39 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. இது, முந்தைய மே மாதத்தில் 12.34 சதவீதமாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.