புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அல்ட்ரா டெக்: லாபம் ரூ.1,582 கோடி

ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் முதல் காலாண்டில் ரூ.1,582 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:10 pm

DIN

ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் முதல் காலாண்டில் ரூ.1,582 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இருப்பினும் இது, இதற்கு முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,700.03 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.94 சதவீதம் குறைவாகும்.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.11,829.84 கோடியிலிருந்து 28.18 சதவீதம் உயா்ந்து ரூ.15,163.98 கோடியானது.

முதல் காலாண்டில் ஒட்டுமொத்த சிமெண்ட் விற்பனை 2.50 கோடி டன்னாக இருந்தது. இது, 16 சதவீத வளா்ச்சியாகும் என அல்ட்ராடெக், பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்கின் விலை 5.03 சதவீதம் உயா்ந்து ரூ.6,437-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.