புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிவிஎஸ் மோட்டாா்: லாபம் ரூ.297 கோடி

 டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலமாக ரூ.297 கோடி நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது

News image
Updated On :28 ஜூலை 2022, 8:27 pm

DIN

 டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலமாக ரூ.297 கோடி நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது. அதேசமயம், கரோனா தாக்கம் காணப்பட்ட முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனையின் மூலமாக கிடைத்த வருவாய் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.4,692 கோடியிலிருந்து ரூ.7,348 கோடியானது.

தனிப்பட்ட அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.53 கோடியிலிருந்து ரூ.321 கோடியானது.

அதேபோன்று, 2021 ஜூன் காலாண்டில் 6.58 லட்சமாக இருந்த வாகன விறஅபனை 2022 ஜூன் காலாண்டில் 9.07 லட்சமாக காணப்பட்டது.

கடந்தாண்டின் முதல் காலாண்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தற்போதைய முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை ஒப்பீடு செய்ய இயலவில்லை என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.