

இந்த வருடத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் மீதான மதிப்புகள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன.
கிரிப்டோவின் அடையாளமான பிட்காயின் ஒரு பங்கின் விலை ஒன்றரை மாதத்தில் ரூ.32 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.19 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக, இந்த ஆண்டில் முதல் முறையாக கிரிப்டோகரன்சியின் வணிகம் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைவாக வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ந்து நாணயங்களின் விலைகள் குறைவதால் பதற்றத்தில் முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்வதும் பணவீக்கத்தின் தாக்கமும் கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சிக்கான முதன்மை காரணங்கள் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான டோஜ் காயினின் விலையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.