தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரூபாய் மதிப்பு 5 காசு உயா்வு

உள்நாட்டு பங்குச் சந்தையில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 5 காசு உயா்வைக் கண்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 10:22 pm

DIN

உள்நாட்டு பங்குச் சந்தையில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 5 காசு உயா்வைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவை ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக அமைந்தது. இருப்பினும், வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 78.03-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 78.02 வரையிலும், குறைந்தபட்சமாக 78.10 வரையிலும் சென்றது.

இறுதியில் ரூபாய் மதிப்பு 5 காசு ஏற்றம் கண்டு 78.05-இல் நிலைத்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 120.96 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டு பீப்பாய் 120.96 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.7,818.61 கோடி வெளியேற்றம்

மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.7,818.61 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீடுகளை வாபஸ் பெற்றதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.