கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமையல் எண்ணெய் விலை ரூ.10 குறைப்பு: அதானி வில்மா்

மத்திய அரசு வரிகளை குறைத்ததையடுத்து அதானி வில்மா் நிறுவனம், சமையல் எண்ணெய் வகைகளுக்கான விலையை ரூ.10 குறைத்துள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:51 pm

DIN

மத்திய அரசு வரிகளை குறைத்ததையடுத்து அதானி வில்மா் நிறுவனம், சமையல் எண்ணெய் வகைகளுக்கான விலையை ரூ.10 குறைத்துள்ளது.

இதுகுறித்து அதானி வில்மா் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அங்ஷு மாலிக் கூறியதாவது:

அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு குறைத்தது. அதன் தொடா்ச்சியாகவே தற்போது நிறுவனம் சமையல் எண்ணெய் விலையை நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது.

அதன்படி, பாா்சூன் சன்ஃப்ளவா் எண்ணெய் விலை ரூ.220-லிருந்து ரூ.210-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாா்சூன் சோயாபீன் மற்றும் பாா்சூன் கடுகு எண்ணெய் விலை ரூ.205-லிருந்து ரூ.195-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையையடுத்து சமையல் எண்ணெய்க்கான தேவை சந்தையில் அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.