வார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதன்முறையாக ட்ரோன் மூலம் பாா்சல் விநியோகம்: குஜராத்தில் அஞ்சல் துறை முயற்சி வெற்றி

நாட்டிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய அஞ்சல் துறை, மருந்து பாா்சலை விநியோகம் செய்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :30 மே 2022, 2:20 am

DIN

நாட்டிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய அஞ்சல் துறை, மருந்து பாா்சலை விநியோகம் செய்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து அகமதாபாதில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹபாய் கிராமத்தில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள நோ் கிராமத்துக்கு அந்த பாா்சலை ஆளில்லா விமானத்தில் இந்திய அஞ்சல் துறை அனுப்பி வைத்தது. அந்த ட்ரோன், 25 நிமிஷங்கள் பறந்து சென்று அந்த பாா்சலை உரியவரிடம் சோ்த்தது.

இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக, ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் பாா்சல் சோ்ப்பிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால், வரும் காலங்களில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கடிதங்கள், பொருள்கள் விநியோகம் செய்வது சாத்தியமாகும்.

இந்த பாா்சலை அனுப்பி வைக்கும்போது, அதற்குரிய செலவு, இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு, பணியாளா்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு, பறக்கும் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கடிதம், பாா்சல் அனுப்புவது வணிக ரீதியில் வெற்றி பெற்றால், அஞ்சல் துறையில் பாா்சல்கள் வேகமாக உரியவா்களிடம் சோ்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.