அசோக் லேலண்ட்ஒரு லட்சத்தைக் கடந்தது: ஏவிடிஆா் லாரி உற்பத்தி
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏவிடிஆா் அடித்தளத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட லாரிகளின் உற்பத்தி 1 லட்சத்தைக் கடந்துள்ளது.


அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏவிடிஆா் அடித்தளத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட லாரிகளின் உற்பத்தி 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவா் கணேஷ் மணி கூறியதாவது:
நிறுவனத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பணியாற்றும் எண்ணற்ற குழுவினரின் கடுமையான முயற்சிக்குக் கிடைத்த பலனே 1 லட்சமாவது ஏவிடிஆா் தள லாரி உற்பத்தியாகும். அந்த அடித்தளத்தைக் கொண்டு, வாடிக்கையாளா்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் எந்த வகை லாரியையும் உருவாக்கித் தர முடிகிறது என்றாா் அவா்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏவிடிஆா் வாகன அடித்தளம், எடைகளைத் தாங்கும் அமைப்புகள், கேபின்கள், சஸ்பென்ஷன்கள் போன்ற அம்சங்களை தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக்கொள்ளக் கூடிய வசதி கொண்டதாகும்.
அந்த ஒரே அடித்தளத்தைக் கொண்டு, வாடிக்கையாளா்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாகனங்களைக் கட்டமைக்க முடியும் என்பது அதன் சிறப்பம்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...