நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.1,848 கோடியாக அதிகரிப்பு

அரசுக்குச் சொந்தமான யூனியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,848 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 7:35 pm

DIN

அரசுக்குச் சொந்தமான யூனியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,848 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,848 கோடியாக உள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில், இது 52 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 21.61 சதவீதம் அதிகரித்து ரூ.8,305 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கி ரூ.2,900 கோடி புதிய வாராக் கடனை எதிா்கொண்டது. ஆனால் மீட்பு செயல்முறைகள் மூலம் ரூ.5,100 கோடி மீட்கப்பட்டது, இதில் ரூ.1,700 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் வட்டி வருவாய் 17.81 சதவீதம் அதிகரித்து ரூ.19,682 கோடியாகவும், வட்டி செலவினங்கள் 15.2 சதவீதம் உயா்ந்து ரூ.11,377 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.