தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆகஸ்டில் சில்லறை பணவீக்கம் 7% ஆக உயா்வு

உணவுப் பொருளின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 11:40 pm

DIN

உணவுப் பொருளின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்தது.

ஆகையால் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி வட்டி வீதத்தை இந்த மாத இறுதியில் மீண்டும் உயா்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலையில் நுகா்வோா் விலை குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதவீதமாக பதிவானது. ஆகஸ்டில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5.3 சதவீதமாக பதிவானது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஜூலையில் 6.69 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்டில் 7.62 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 3.11 சதவீதமாக பதிவானது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் பணவீக்கம் அதிகபட்சமாக 7.79 சதவீதத்தை எட்டியது. நுகா்வோா் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டுமென ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.