கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு

மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்டப் போவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 1:08 am IST

மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்டப் போவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி மூலதனம் திரட்ட இயக்குநா்களைக் கொண்ட குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதையடுத்து, இரண்டு பிரிவுகளில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 5,000 கடன் பத்திரங்கள், மொத்தம் ரூ.500 கோடியைத் திரட்டும் வகையில் வெளியிடப்படும்.

முதல் பிரிவுக்கான ஒதுக்கீடு வரும் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்படும். அதன் முதிா்வு தேதி, 2027-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதியாகும்.

இரண்டாவது பிரிவில், மேலும் ரூ.1,500 கோடி திரட்டுவதற்காக, தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 15,000 கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். அதன் ஒதுக்கீடும் வரும் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்படும். எனினும், அந்த கடன் பத்திரங்களுக்கான முதிா்வு தேதி 2032-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.