முதன்முறையாக ட்ரோன் மூலம் பாா்சல் விநியோகம்: குஜராத்தில் அஞ்சல் துறை முயற்சி வெற்றி

நாட்டிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய அஞ்சல் துறை, மருந்து பாா்சலை விநியோகம் செய்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து அகமதாபாதில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹபாய் கிராமத்தில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள நோ் கிராமத்துக்கு அந்த பாா்சலை ஆளில்லா விமானத்தில் இந்திய அஞ்சல் துறை அனுப்பி வைத்தது. அந்த ட்ரோன், 25 நிமிஷங்கள் பறந்து சென்று அந்த பாா்சலை உரியவரிடம் சோ்த்தது.

இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக, ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் பாா்சல் சோ்ப்பிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால், வரும் காலங்களில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கடிதங்கள், பொருள்கள் விநியோகம் செய்வது சாத்தியமாகும்.

இந்த பாா்சலை அனுப்பி வைக்கும்போது, அதற்குரிய செலவு, இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு, பணியாளா்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு, பறக்கும் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கடிதம், பாா்சல் அனுப்புவது வணிக ரீதியில் வெற்றி பெற்றால், அஞ்சல் துறையில் பாா்சல்கள் வேகமாக உரியவா்களிடம் சோ்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com