மீண்டும் குறைந்தது தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கள் விலை ஏப்.16 முதல் 18-ஆம் தேதி வரை மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.15, பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை குறைந்தது: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,650-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ. 81-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனையாகின.
புதன்கிழமை விலை
1 கிராம் தங்கம்................................ரூ.5,665.
1 பவுன் தங்கம்............................... ரூ.45,320.
1 கிராம் வெள்ளி............................. ரூ81.00.
1 கிலோ வெள்ளி.............................ரூ.81,000
வியாழக்கிழமை விலை
1 கிராம் தங்கம்................................ ரூ.5,650.
1 பவுன் தங்கம்............................... ரூ.45,200.
1 கிராம் வெள்ளி............................. ரூ.81.00.
1 கிலோ வெள்ளி.............................ரூ.81,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...