ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் 11% உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸின் நிகர லாபம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:04 pm

DIN

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸின் நிகர லாபம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் மாதம் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,983 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்திய நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில் 18.35 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,599 கோடியாக இருந்தது.இருந்தாலும், கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டோடு ஒப்பிடுகையில் 4-ஆவது காலாண்டு நிகர லாபம் 3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,096 கோடியாக இருந்தது.2021-22-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.22,597 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் ரூ.26,606 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 18 சதவீத வளா்ச்சியாகும்.எனினும், அதற்கு முந்தைய காலாண்டில் நிறுவனம் ஈட்டிய செயல்பாட்டு வருவாயான ரூ.26,700 கோடியோடு ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.