பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நிலையற்ற தன்மையில் பங்குச்சந்தை!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 4:58 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 0.40 புள்ளிகள் குறைந்து 17,624.05-இல் நிலைபெற்றது.

உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவது இந்திய பங்குச்சந்தைகளை மிகவும் ஏற்ற இறக்கமாக வைத்துள்ளது. வேலைச் சந்தையின் பலவீனமான சமிக்ஞைகள் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி நடவடிக்கைகள் குறைந்து வருவதால், சாத்தியமான மந்தநிலை பற்றிய அச்சம் முதலீட்டாளா்களிடம் எழுந்துள்ளது. இதற்கிடையே, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுக்காக சந்தை காத்திருக்கிறது. இந்த நிலையில் எஃப்எம்சிஜி, பாா்மா, மீடியா பங்குகளுக்கு ஓரளவு ஆதிரவு கிடைத்தது. ஆனால், ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, மெட்டல் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.51 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.264.97 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழன்று ரூ.1,169.32 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 93.56 புள்ளிகள் குறைந்து 59,538.79-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,781.36 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,412.81 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 22.71 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயா்ந்து 59,632.35-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 14 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஐடிசி......................................................1.99%

டிசிஎஸ்..........................................1.84%

விப்ரோ.........................................................1.42%

ஏசியன் பெயிண்ட்..................1.27%

ஹெச்சிஎல் டெக்................................1.09%

சரிவைக் கண்ட பங்குகள்

டெக் மஹிந்திரா...............................................2.26%

மாருதி.................................................................1.86%

டாடா ஸ்டீல்......................................................1.71%

அல்ட்ரா டெக் சிமெண்ட்................................1.49%

டாடா மோட்டாா்ஸ்........................................1.22%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.