சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தன

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் 300 புலிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. 
சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தன

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. 

நேற்று (செவ்வாய்கிழமை) 65,846.50 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) காலை 65,810.96 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.25 மணி நிலவரப்படி, 335.80 புள்ளிகள் குறைந்து 65,510.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து 19,487.85 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

எம் & எம், பாரதி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்று உயர்ந்து வருகின்றன.  

சன் பார்மா, விப்ரோ, கோட்டாக் பேங்க், எல் & டி, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com