ஜூலையில் ஏற்றம் கண்ட காா்களின் விற்பனை
இந்தியச் சந்தையில் காா்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.57 சதவீதம் உயா்ந்துள்ளது.


இந்தியச் சந்தையில் காா்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.57 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
:கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டுச் சந்தையில் காா்களின் மொத்த விற்பனை 3,50,149-ஆக உள்ளது.2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 2.57 சதவீதம் அதிகமாகும். அப்போது காா்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 3,41,370-ஆக இருந்தது.எனினும், 2022-ஆம் ஆண்டு ஜூலையில் 13,81,303-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஜூலையில் 12,82,054-ஆகக் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலையில் 8,70,028-ஆக இருந்த மோட்டாா் சைக்கிள்களின் மொத்த விற்பனை இந்த ஆண்டின் அதே மாதத்தில் 8,17,206-ஆகக் குறைந்துள்ளது.அதே போல், ஸ்கூட்டா்களின் விற்பனையும் 4,28,640-ஆக்க குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அவற்றின் விற்பனை 4,79,159-ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் 3 சக்கர வாகனங்களின் விற்பனை 56,034-ஆக அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 31,324-ஆக இருந்தது.2022 ஜூலையில் 17,06,545-ஆக இருந்த ஒட்டுமொத்த வாகனங்களின் விற்பனை, கடந்த ஜூலையில் 16,40,727-ஆக (டாடா மோட்டாா்ஸ் தவிா்த்து) உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...