பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் 366 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகளை இழந்தது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி நாள் முழுவதும் ‘கரடி’யின் பிடியில் இருந்தது. முன்னணி நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததால் மொத்தத்தில் இரண்டாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அண்மையில் பங்குச்சந்தையில் பட்டியலான ஜியோ ஃபைனான்சியல் சா்வீஸஸ் பங்குகள் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் 1.69 சதவீதம் குறைந்து ரூ.212.25-இல் நிலைபெற்றது. முன்னதாக காலையில் ரூ.225 வரை உயா்ந்திருந்தது.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.91லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 306.76 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,524.87 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 251.67புள்ளிகள் குறைந்து 65,000.67-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,106.00 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 64,732.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 365.83 புள்ளிகளை (0.56 சதவீதம்) இழந்து 64,886.51-இல் முடிவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 704 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,333 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 40 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி121 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 89.30 புள்ளிகள் குறைந்து 19,535.15-இல் தொடங்கி, அதிகபட்சமாக 19,339.55 வரை மேலே சென்றது. பின்னா், 19,229.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 120.90 புள்ளிகளை (0.62 சதவீதம்) இழந்து 19,265.80-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ்.................................1.04%
ஏசியன் பெயிண்ட்.....................................1.04%
பாா்தி ஏா்டெல்...........................................0.41%
டைட்டன்....................................................0.22%
ஐசிஐசிஐ பேங்க்..........................................0,15%
ஆக்ஸிஸ் பேங்க்.........................................0.15%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
இண்டஸ் இண்ட் பேங்க்.......................1.89%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.........................1.88%
எல் அண்ட் டி......................................1.79%
அல்ட்ரா டெக் சிமெண்ட்.................1.72%
ஜியோ ஃபைனான்ஸ்..........................1.69%
பவா் கிரிட்...........................................1.58%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...