புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்! இன்றைய நிலவரம்...

வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 10:45 am

DIN

வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 64,886.51 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 64,908.08 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 110.09 புள்ளிகள் அதிகரித்து 64,996.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 40.2 புள்ளிகள் உயர்ந்து 19,306.05 புள்ளிகளில் வர்த்தகமானது. 

சிப்லா, அதானி எண்டர்பிரைசஸ், எம் & எம், எல் & டி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில் ஹெச்சிஎல் டெக், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ ஆகியவை பின்னடைவைச் சந்தித்தன. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 1.38% சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.