திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உற்சாகத்துடன் தொடங்கினாலும் தடுமாற்றம் கண்ட சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை தடுமாற்றம் கண்டது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 8:50 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை தடுமாற்றம் கண்டது.
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் காலையில் பெற்ற லாபத்தில் பெரும் பகுதியை இழந்து, 11 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பின்னர் தடுமாற்றம் கண்டது. குறிப்பாக பிற்பகல் வர்த்தகத்தில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது.
இருப்பினும், ஆட்டோ, மெட்டல், ஐடி, ரியால்ட்டி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அது சரிவிலிருந்து தப்பியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.33 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.310.31 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.61.51 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தடுமாற்றம்:
காலையில் 2035.76 புள்ளிகள் கூடுதலுடன் 65,311.58-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,458.70 வரை மேலே சென்றது. பின்னர், 65,052.74 வரை கீழே சென்ற
சென்செக்ஸ், இறுதியில் 11.43 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்ந்து 65,087.25-இல் முடிவடைந்தது.
17 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,301 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,
724 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 5 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 90.80
புள்ளிகள் கூடுதலுடன் 19,433.45-இல் தொடங்கி, அதிகபட்சமாக 19,452.80 வரை மேலே சென்றது. பின்னர், 19,3334.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில்
4.80 புள்ளிகள் (0.02 சதவீதம்) கூடுதலுடன் 19,347.45-இல்
நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
ஜியோ ஃபைனான்ஸ் 4.99%
டாடா ஸ்டீல் 2.09%
எம் அண்ட் எம் 1.53%
மாருதி 1.50%
இன்ஃபோசிஸ் 1.19%
சரிவைக் கண்ட பங்குகள்
பவர்கிரிட் 1.59%
எஸ்பிஐ 1.31%
ஐசிஐசிஐ வங்கி 0.97%
ஹெச்டிஎஃப்சி வங்கி 0.71%
இண்டஸ்இண்ட் வங்கி 0.56%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.